ஜெனிவா: கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பல கோடி பேர்களை பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
சில நாடுகளில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகம் செய்ய துவங்கிவிட்டன. இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக சுகாதார நிறுவன அவசரநிலைத் திட்டத் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜே.ரியான் கூறுகையில், ‘இது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம்.கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்,’ என எச்சரித்துள்ளார்.