குப்பைத்தொட்டியில் துப்பாக்கி!

Filed under: தமிழகம் |

குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மத்திய சிறை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்யும் போது ஒரு கையடக்க துப்பாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து சோதனையிட்டு வருகின்றனர். குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் துப்பாக்கியை கடத்தப்பட இருந்ததா? சிறையிலுள்ள யாரையாவது கொலை சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.