கூட்டத்தில் திக்குமுக்காடும் திருப்பதி!

Filed under: Uncategory |

தற்போது கோடை விடுமுறை என்பதால் பல பகுதிகளில் உள்ள மக்களும் பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர்.

இதனால் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ள நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான வரிசையில் பல்லாயிர கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 3 நாட்களுக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக மக்கள் மேலும் வரவேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.