கூல் சுரேஷின் வேண்டுகோள்!

Filed under: சினிமா |

நடிகர் கூல் சுரேஷ் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ஆகவே நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு.’’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 15ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் இப்படம் வெளியாகும் செப்டம்பர் 15ம் தேதியன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும்; இதை தான் மட்டும் கேட்கவில்லை சிம்புவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கேட்கிறார்கள் என்று பிரபல நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். “கேஜிஎப் -2” ரிலீசாகும் முன்பு, விடுமுறை வேண்டும் என்று ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.