கொரோனா அதிகமாக பாதித்த நாடுகள்: பட்டியலில் இந்தியா முன்னேற்றம்!

Filed under: அரசியல்,இந்தியா |

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8400 பேருக்கு மேல் உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது.

ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கம்மியாக இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு மேலே சென்றுள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்கா (2,071,489), பிரேசில் (7,77,581) மற்றும் ரஷ்யா (5,02,436) ஆகிய நாடுகள் உள்ளன.