கோயில்களில் போன் பயன்படுத்த தடை!

Filed under: தமிழகம் |

மதுரை ஐகோர்ட் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை என உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் வழக்கு தொடர்ந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.