கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி. பாஜகவை பற்றி அனைவருக்கும் தெரியும், அவர்களின் ஓட்டு 4% சதவீதம் மட்டுமே. திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் கோவையில் இல்லவே இல்லை. ஆகவே நான் கூறியது போல போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டும்தான், பாஜகவிற்கு இங்கு வேலையே இல்லை” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.