சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும் !அரசியலை விட்டே விலகுகிறேன் -கே. பி. முனுசாமி அதிரடி

Filed under: அரசியல்,தமிழகம் |

எனது நிலத்தால் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் நிரூப்பிருத்தால் அரசியலை விட்டே விலக தயார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல கால்வாய் அமைக்க கேபி முனுசாமி நிலம் உள்ளதால் திட்டத்தை தடுப்பதாக தெரிவித்தார். கலைஞர் மகன் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டான் என ஸ்டாலின் பேசுகிறார். தகுந்த ஆதாரங்களுடன் வந்து எனது நிலத்திற்கும் கால்வாய்கள் அமைக்கும் இடத்திற்கும் சம்மந்தம் உள்ளது என அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.

மாறாக நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டாம். மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கபட்டு 18 சதவீதம் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. பிறகு அதிமுக ஆட்சியில் நான் உள்ளாட்சி அமைச்சராக பொறுப்போற்று மீதமுள்ள 82 சதவீதம் பணிகளை முடித்தேன். ஸ்டாலின் என் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி விட்டு அதனை மக்கள் மீது போடுகிறார் என்பது ஸ்டாலின் தரம் தாழ்ந்த தலைவர் என்பது காட்டுக்கிறது. எதிரியாக இருந்தாலும் நாங்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும். அவரது குடும்பத்தினருக்கு சேவை செய்யட்டும்” எனக் கூறினார்.