சசி குமார் படத்தில் நடிக்க தயங்கும் விஜய்!

Filed under: சினிமா |

தளபதி 65 படத்தை முருகதாஸ், தளபதி 66 படம் மகிழ்திருமேனி அல்லது பாண்டிராஜ், தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் என வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில் தளபதி விஜய்யிடம் பிரபல நடிகர் ஒருவர் கதை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும் அந்த படத்தில் நடிக்க சிறிது தயக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி விஜய்யை வைத்து ஒரு சரித்திரப் படத்தை உருவாக்குவதற்காக கதை ஒன்றை தயார் செய்து விஜய்யிடம் கூறியுள்ளார்.

விஜய்க்கு அந்த கதை பிடித்திருந்தாலும் ஏற்கனவே புலி படத்தில் அடிபட்டதால் அதில் நடிக்க தயங்குகிறாராம். இந்த வாட்டி தப்பு எதுவும் நடக்காது என சசிகுமார் தரப்பு விஜய்யை கன்வின்ஸ் செய்து வருவதாகவும், இருந்தாலும் விஜய்க்கு சிறிது தயக்கம் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. சரித்திரகாலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் எதுவுமே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஓடவில்லை என்பதை அறிந்த விஜய், தற்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டதாக தெரிகிறது.

சசிகுமார் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு இதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவரது வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. விஜய்க்காக மிரட்டலான கெட்டப் ஒன்றை ரெடி செய்து வைத்திருக்கிறார் சசிகுமார்.