சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Filed under: இந்தியா,தமிழகம் |

புது டெல்லி,மே 04

தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது.

இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும்.

இந்த விருதுக்கான நியமனங்கள்/பரிந்துரைகளை வரவேற்று 20 செப்டம்பர், 2019 அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. https://nationalunityawards.mha.gov.in என்னும் இணையதள முகவரியில் இந்த விருது தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன.

மேற்கண்ட இணையதளத்தில் நியமனங்கள் வரவேற்கப்படுவதை 30 ஜூன், 2019 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.