சித்தார்த் சொல்வது முழுக்க பொய்!

Filed under: சினிமா,தமிழகம் |

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கூறியது அனைத்தும் முழுக்க முழுக்க பொய் என மதுரை விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை செல்வதற்காக நடிகர் சித்தார்த் தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது மாஸ்க் மற்றும் ஐடி கார்டு காட்டுமாறு கேட்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறைதான் என்று விமான நிலையத்தின் மூத்த அதிகாரி கூறினார். மேலும் சித்தார்த்தின் பெற்றோரை சோதனை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த பெண் தான் என்றும் அவர் தமிழில் தான் பேசினார் என்றும் ஹிந்தியில் பேச வில்லை என்றும் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் ஹிந்தியில் பேசினார்கள் என்றும் இது குறித்து விளக்கமளித்தார். பத்து நிமிடத்திற்குள் அவர்களுக்கு சோதனை செய்து அனுப்பப்பட்டு விட்டார்கள் என்றும் சித்தார்த்திடம் யாரும் ஹிந்தியில் பேசுமாறு சொல்லவில்லை என்றும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்றும் சித்தார்த் வைத்த குற்றச்சாட்டு தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார்.