சினேகன் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறாரா?

Filed under: அரசியல்,சினிமா |

கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமானவரானார். அதன்பின் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சினேகனுக்கு தன் தலைமையில் திருமணமும் நடத்திவைத்தார் நடிகர் கமலஹாசன். தற்போது சினேகனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சினேகன் கட்சியை விட்டி வெளியேறி சினிமாவில் முழு கவனம் செலுத்த ஆலோசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.