சிறப்பு பேருந்து குறித்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலைக்கு தீபத்திருவிழா நடைபெற இருப்பதை அடுத்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வரும் டிசம்பர் 6ம் தேதி மற்றும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொருத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.