சிலிண்டரை 200 ரூபாய்க்கு வாங்கலாம் சலுகை இரண்டு நாட்கள் மட்டுமே முந்துங்கள்!!

Filed under: இந்தியா,தமிழகம் |

பணமில்லா வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனையை இந்தியா முழுவதிலும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல செயலிகளும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் LPG சிலிண்டரை Paytm-லிருந்து முன்பதிவு செய்வதன் மூலம் சுமார் ரூ.500 வரை கேஷ்பேக் பெறலாம். LPG சிலிண்டர்கள் 700 முதல் 750 ரூபாய் வரை இருக்கும்நிலையில் 200 முதல் 250 ரூபாய் செலவில் Paytm-ன் சிறப்பு கேஷ்பேக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் HP, Indane, Bharat Gas LPG சிலிண்டர்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் வரை இந்த Cashback முதல் முறையாக LPG கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Paytm பயன்பாட்டின் மூலம் பெறலாம்.இந்த ஆபர் டிசம்பர் 31,2020 வரை செல்லுபடியாகும்முதல் முறையாக Paytm மூலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை.Paytm செயலியைத் திறக்கவும்.

Recharge and Pay Bills செலக்ட் செய்யவும்.

Book a Cylinder பதிவுசெய்யவும்.

HP, Indane, Bharat Gas இதில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்யவும்.

நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட மொபைல் எண் அல்லது எல்பிஜி ஐடியை கொடுக்கவும்.

இப்போது Proceedஐ கிளிக் செய்யவும்.

உடனே LPG ID, நுகர்வோர் பெயர், ஏஜென்சி பெயர் மற்றும் சிலிண்டர் விலையை பார்த்த பிறகு பணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்துவதற்கு முன், ப்ராம்கோட் பிரிவை FIRSTLPG-யை கிளிக் செய்யவும். இதன் மூலம் ரூ .500 வரை கேஷ்பேக் பெறலாம். விளம்பர குறியீட்டை மறந்துவிட்டால், கேஷ்பேக் கிடைக்காது. எனவே, கட்டணம் செலுத்துவதற்கு முன் விளம்பர குறியீட்டை கவனமாக நிரப்ப வேண்டியது அவசியம்.