சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்

Filed under: சினிமா |

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? என்றும், டிடிஎஸ் தொகை தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில் மற்றொரு மனு தாக்கல் செய்தது ஏன்? எனவும் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக ரூ.4 கோடி சம்பள பாக்கியை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.