சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் படம் “கங்குவா.”
இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியானது. இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகரும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகனுமான பாபி தியோல் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் சூர்யாவுடன் இணைந்து, நட்டி, திஷா பதானி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.