சென்னை உயர்நீதிமன்றம் திருமணமான மகன் இறந்துவிட்டால் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வயதான தாய் தனது மகனின் சொத்தில் தனக்கு உரிமை உண்டு என்று நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உண்டு என்று தீர்ப்பளித்தது. ஆனால் மறைந்த மோசஸ் மனைவி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் திருமணம் ஆன மகன் இறந்து விட்டால் மகனின் சொத்துக்களில் தாய்க்கு உரிமை இல்லை என்றும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே உரிமை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.