சென்னை பல்கலைக்கழகத்தின் அரிய வாய்ப்பு!

Filed under: சென்னை |

சென்னை பல்கலைக்கழகம் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பில் 2015 மற்றும்- 2016 கல்வியாண்டிற்கு முன்பாகவும், முதுகலை படிப்பில் 2019 மற்றும்- 2020ம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வில் மேற்கண்ட கல்வி ஆண்டில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டால் அரியரை கிளியர் செய்து கொள்ளலாம் அல்லவா!