சென்னை விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல் !

Filed under: சென்னை |

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனை செய்த போது, அவரது உடலில் தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.