‘சைரன்’ திரைப்பட மோஷன் போஸ்டர்!

Filed under: சினிமா |

ஜெயம் ரவி அடுத்து நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ளா இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளதால், ஜெயம் ரவி ரொம்பவே உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் நடித்துள்ள ‘அகிலன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இரண்டு படங்களில் வெளியீட்டுக்காக காத்திருக்கும் ஜெயம் ரவி, அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஊட்டியில் நிறைவடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அஹம்மது இயக்கும் புதிய படத்திலும் ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் 31வது படம் குறித்தும் சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் இப்படத்திற்கு ‘சைரன்’ என டைட்டில் உறுதியாகி உள்ளது. இதனை படக்குழு மோஷன் போஸ்டருடன் தற்போது அறிவித்துள்ளது. ஜெயம் ரவியுடன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், அனுபமா பரமேஸ்வரனும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தலைப்புக்கேற்ப சைரன் ஒலித்தபடியே தொடங்கும் இந்த மோஷன் போஸ்டர், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ‘சைரன்’ படத்தின் கதைக்களம், சஸ்பென்ஸ் திரில்லர் அல்லது க்ரைம் திரில்லர் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.