சொத்து வரிகள் உயர்வு!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழ்நாடு அரசு சொத்தின் மீதான வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்…

 

சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது.

இதேபோல, சென்னையோடு 2011ம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளுக்கு 25% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 50%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 75% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. ஆயிரத்து 801 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100% உயர்த்தப்படுகிறது.
சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150%, தொழிற்சாலை மற்றும் கல்வி நிலையக் கட்டடங்களுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. சென்னையோடு 2011ம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 100%, தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75% சொத்தின் மீதான வரி உயர்த்தப்படுகிறது.