ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

Filed under: சென்னை,தமிழகம் |

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கை வெட்டப்படும் என்றும், ஆ.ராசா வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது என காட்டமாக கூறினார்.

காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ.ராசா என்று விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ராசாவும் கனிமொழியும் திகார் சிறையில் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை என தெரிவித்து ள்ளார்.
ஜெயலலிதா சமாதியில் எழுதுவோம் , இடிப்போம் என்று ராசா கூறியுள்ளார், அப்படி செய்தார் கை வெட்டப்படும் என்று துணிச்சலாக சொல்கிறோம் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஒரு ராஜா அல்ல ஓராயிரம் ராஜா வந்தாலும் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போவார்கள் என்றும், ஜெயலலிதா பற்றி இழிவாகப் பேசினால் நாட்டில் நடமாட முடியாத நிலையை ஆ ராசா விரைவில் சந்திப்பார்‌ எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.