டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

டிஎன்பிஎஸ்சி தலைமைச் செயலகத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பை பற்றிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்றும் இன்று முதல் வரும் அக்டோபர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களாக பணியாற்ற விரும்பும் நபர்கள் உடனடியாக மேற்கண்ட இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.