டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை!

Filed under: அரசியல்,உலகம் |

டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசுவதால் அவரை ப்ரமோட் செய்யமாட்டோம் என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறிக் காரணமாகக் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து அதிகரிக்கும் போராட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் கருத்துகள் நிறவெறியைத் தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே அவரின் டிவீட் ஒன்றை டிவிட்டர் நிர்வாகம், கொள்கைகளுக்கு எதிரானது என்று நீக்கியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் இப்போது ஸ்நாப் சாட்டும் ட்ரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கருத்துகளை ப்ரமோட் செய்வதில்லை என கூறியுள்ளது. தங்கள் முகப்பு பக்கத்தில் இனி ட்ரம்ப் விளம்பரப்படுத்தப்பட மாட்டார்.