தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழகத்தில் இன்று அனல்காற்றும் மழையும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் மக்கள் பகல்வேளைகளில் வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வியர்வையால் குளிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்ன, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெய்யிலின் அளவு உக்கிரமாக இருக்கும் என்பதால் இந்த 6 மாவட்ட பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதே போல ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.