திரவுபதி முர்மு குடியரசு தலைவராகிறார்!

Filed under: அரசியல் |

திரவுபதி முர்மு 70 சதவீதம் வாக்குகள் பெற்று குடியரசு தலைவராகிறார்.

இன்று காலை 11 மணி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு முன்னிலையில் இருக்கிறார்.

சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாம் சுற்று முடிவில் திரவுபதி முர்மு 70 சதவீத வாக்குகளை பெற்று உள்ளதால் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு 3ம் சுற்று முடிவில் முர்மு 2,161 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,058 வாக்குகளும் பெற்றுள்ளார்.