திருடனின் சாமர்த்தியம்!

Filed under: தமிழகம் |

திருட போன இடத்தில் சார்ஜ் போட்ட போனை மறந்த வைத்த திருடன் நடத்திய வினோத சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் சித்திரவேல். வழக்கம்போல ஓட்டல் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடி வீட்டிற்கு சென்றுள்ளார். பின் உணவகத்திற்குள் புகுந்த திருடன் அங்கு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளான். சித்திரவேலின் ஓட்டலிலிருந்து ஆசாமி ஒருவன் எகிறி குதித்து செல்வதை கண்ட சிலர் சித்திரவேலுக்கு போன் செய்து சொல்லியுள்ளனர். சித்திரவேல் போலீஸுக்கு தகவல் சொல்லியுள்ளார். ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது உள்ளே வந்த திருடன் முதலில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளான். அது கடினமாக இருந்ததால் கல்லாவில் இருந்து பணத்தை எடுக்க தொடங்கியுள்ளான். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் அங்கேயே சார்ஜூம் போட்டுள்ளான். கல்லாவிலிருந்து நிறைய பணம் கிடைக்கவும் அதை பார்த்த குஷியில் சார்ஜ் போட்ட தனது போனை மறந்துவிட்டு கம்பி நீட்டியுள்ளான் திருடன். அந்த போனை பறிமுதல் செய்த போலீஸார் அதை வைத்து திருடனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.