திருப்பதியில் லட்டு கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன்!

Filed under: இந்தியா |

பக்தர்கள் பேஸ் ரெககனைஷேசன் மூலம் திருப்பதியில் தங்குவதற்கும் அறை வாடகைக்கு எடுப்பதற்கும் சோதனை செய்யப்படுவார்கள். அறையை வாடகைக்கு எடுத்தவரே தான் காலி செய்ய வேண்டும். அப்போதுதான் டெபாசிட் பணம் திரும்ப தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச லட்டு டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதையடுத்து அதை தவிர்ப்பதற்காக இலவச லட்டு டோக்கன் கவுண்டர்களிலும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜியுடன் கூடிய கேமரா பொருத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் ஒரு பக்தர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இலவச லட்டுக்களை பெற முடியாது என்றும் ஒரு நபர் ஒருமுறை லட்டு வாங்கி விட்டால் அவர் பேஸ் ரெககனைஷேசன் மூலம் அடுத்த முறை வரும்போது கண்டுபிடிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அடுத்தடுத்து பேஸ் ரெககனைஷேசன் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படுவதால் பெருமளவு முறைகேடுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்