திருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு சிறை தண்டனை!

Filed under: இந்தியா |

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்கள் மூன்று பேரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இன்று நீதிமன்ற ஆணையை அமல்படுத்தவில்லை என ஊழியர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு திருமலை -திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து ஆந்திர மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.