திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஊழலும் முரண்பாடுகளும்-கொதிக்கிறார் ‘முகநூல்’ புரட்சியாளர் கிஷோர் கே. ஸ்வாமி!

Filed under: அரசியல்,தமிழகம் |

Untitled-1 copyகருணாநிதி, ஆட்சியில் எந்த ‘திட்டம்’ போட்டாலும் அதில் ‘ஊழல்’ என்பது சத்தியமாக இருக்கும் என்பது, கருணாநிதியை லேசாகக் கவனித்து வருகிற எவருக்கும் தெரியும்!

ஆனால் –

வான்புகழ் மிக்க வள்ளுவனுக்கு சிலை அமைக்கிற விஷயத்தில் கருணாநிதி ஊழல் செய்துவிட்டார் என்று நமக்கு புகார் வந்தபோது, எடுத்த எடுப்பிலேயே “சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது… கருணாநிதி மீதுள்ள காழ்ப்புணர்வில் சொல்லப்படுகிற விஷயம் இது…” என்றுதான், நாம் கருதினோம்! நம்பவில்லை!

* ‘Facebook’ சமூகவலைத்தளத்தில் வலுவான ஆதாரங்களுடன் & தெளிவான கருத்துக்களைப் பதிவு செய்து, சற்றேறக் குறைய பத்தாயிரம் நண்பர்களைப் பெற்றிருக்கும் கிஷோர் கே. ஸ்வாமி, கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் & இன்னொரு பக்கத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டி, சிலை என்றால் என்ன? ஸ்தபதி என்பவர் யார்? சிற்பி என்பவர் யார்? திருவள்ளுவருக்கு சிலை அமைக்க முதலில் திட்டமிட்டது & எப்படி?

அவசர கதியில் & ஊழல் கலந்து, அரைகுறையாக சிலையை முடித்தது எப்படி என்பதை மிகவும் தீர்க்கமாக விளக்கி, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்!
அந்த அறிக்கையை படித்ததும்…

*இப்போதுள்ள திருவள்ளுவர் சிலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்!

*முதலில் திட்டமிட்டபடி & சிற்பி மணி நாகப்பாவின் திட்டப்படி, திருவள்ளுவர் சிலையை சிறப்பாக அமைக்க வேண்டும்!

*இதனை செய்து முடிக்க மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும்!

*உலக அதிசயங்களில் ஒன்றாக & உலகமகா கவிஞன் திருவள்ளுவருக்கு சிலை ஒன்றை அமைக்க வேண்டும்!

*எல்லாவற்றிற்கும் மேலாக, உடனடியாக திருவள்ளுவர் சிலை அமைப்பு தொடர்பாக விசாரணைக் கமிஷனை அமைக்க வேண்டும்!
& என்று நமக்குத் தோன்றியது!

*இதோ கிஷோர் கே. ஸ்வாமியின் குற்றப் பத்திரிகையின் டீடெய்ல் :
முன்னாள் முதல்வரும் தமிழினத்தின் ‘பாதுகாவலர்’ என்று பட்டம் பெற்றவருமான கருணாநிதி, அடிக்கடி வள்ளுவனின் திருவுருவச் சிலை என்று குறிப்பிட்டுப் பேசுவதைப் பார்த்திருப்போம். அது என்ன ‘திரு உருவச் சிலை’ என்று, பழுத்த பகுத்தறிவுவாதியான அவர், இன்னும் விளக்கவில்லை. எனினும் இந்தக் குறிப்பிட்ட திருவள்ளுவர் சிலையைக் குறித்தான, வெளியே வராத தகவல்கள், நமக்கு அதிர்ச்சியூட்டுபவை!

*முதலில், இதைச் ‘சிலை’ என்று சொல்வதே, மிகப் பெரிய தவறு! ‘சிலை’ என்றால் என்ன? சிற்ப இலக்கணப்படி, ‘சிலை’ என்பது, முழுமை அடைந்த உருவம்! மனித உருவம் என்றால், அது முழுவதுமாக முடிக்கப்படும் பொழுது, அதை ‘சிலை’ என்போம்! இதுவோ, ஒரு சிற்பம்! அதுவும், ஒரு புடைப்புச் சிற்பம்கூட கிடையாது! அதாவது, கல்லிலிருந்து ஒரு பக்கம் மட்டும் புடைத்துச் செதுக்கப்பட்டது என்பதைத்தான், ‘புடைப்புச் சிற்பம்’ என்று குறிப்பிடுவோம்! இதுவோ, பின்புறம் பாதி செதுக்கப்பட்டு, அரை குறையாக காட்சியளிக்கிறது!

*குறிப்பிட்ட இந்த சிலையின் முன்புறம்தான், நாம் அடிக்கடி அரசு விளம்பரங்களிலும், கலைஞர் தொலைக்காட்சியிலும் கன்னியாகுமரியின் கடற்கரையில் இருந்தும் பார்க்கிறோம்! அதனுடைய பின் பக்கம் சென்று நாம் பார்த்திருப்போமா? இல்லை. நம் வாழ்வனுபவத்தில், கோவில்களிலும் மற்ற இடங்களிலும் காணும் எண்ணற்ற சிற்பங்களில் ஒன்றாக அதைக் கடந்துவிடும் நமக்கு, இந்தக் குறிப்பிட்ட ‘சிலை’, அதைப் போன்ற எந்த சிற்ப சாஸ்திர அடிப்படைகளுக்கும் முரணாக எழுப்பப்பட்டிருப்பது தெரியுமா? அதனுடைய பின்புறம் தட்டையாக, எந்த விதமான புடைப்பும் இன்றி அமைந்திருக்கும்!

*வள்ளுவர் தன் பின்புறத்தைத் திரும்பிப் பார்க்கப்போகிறாரா என்ன? கருணாநிதியைக் கேள்வி கேட்கக்கூட வழியின்றி, கடல் நடுவே அல்லவா சிறை வைக்கப்பட்டிருக்கிறார்? முழுமையடையாத இந்தச் சிலையை நிர்மாணிக்க, கருணாநிதிக்கு என்ன அவசரம்? இப்படி ஒரு அரைகுறை படைப்பாக வள்ளுவனை செதுக்க வேண்டும் என்று, யாராவது கருணாநிதியிடம் மன்றாடினார்களா? எதற்கு இந்த அசிங்கச் சின்னம்? அவமானச் சின்னம்?

*இதற்கு பதில் தெரிய வேண்டும் என்றால், நாம் சற்று பின்நோக்கிச் செல்லவேண்டும்!
றீ சிற்பக் கலையில் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர், சிற்பி மணி நாகப்பா! ஜி.யு.போப் உட்பட பல சிலைகளை வடித்தவர் மட்டுமல்ல, பிரிட்டிஷாரின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர் & அவரது கலைப் பொக்கிஷங்கள் இன்றும் தமிழகத்தில் பரவலாக நிலைத்து நிற்கிறது! அப்படிப்பட்ட சிற்பியின் மகனும் திறமையான சிற்பியுமான ஜெயராம் நாகப்பா என்பவரை கருணாநிதி தரப்பு, முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான ராஜமாணிக்கத்தின் மூலமாக 1997 &ம் ஆண்டு, ஜனவரி மாதம் அணுகுகிறது!

*அவரும் ஒரு சிறப்பான திட்டத்தைத் தீட்டி, வள்ளுவனின் சிலை, அமெரிக்காவில் இருக்கும் லிபர்டி சிலையைவிட உயரமாக 175 அடியில் அமைந்திடும்படியும், வெண்கலத்தில் உருவான சிலையுமாக அது அமையும்படியும் யோசனையை முன் வைக்கின்றார்! அதற்கு, அப்பொழுது 150 கோடிகள் என்-று பட்ஜெட் முடிவாகிறது! நமது சிறுமைக்குரிய தலைவர் கருணாநிதி, “புறங்கையைத்தானே நக்கினோம். இது தவறா?” என்று கேட்ட பண்பாளர் ஆயிற்றே! அவரது வழித்தோன்றல்களில் ஒன்றாக மகள் செல்வி, ஜெயராம் நாகப்பா தரப்பை தொடர்புகொண்டு, இந்த நிதி ஒதுக்கீட்டில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று கேட்கிறது!

*திடுக்கிடுகிறார் மணி நாகப்பா! இது என்ன கண்றாவி? வள்ளுவனுக்கு சிலை வடிக்க வேண்டும்! உலகம் மெச்சும் வகையில் சிலை இருந்திட வேண்டும்! தமிழகம், உலகம் முழுவதும் புகழ்பெற்றதற்கு, ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவில் போன்ற கலை பொக்கிஷங்கள் இருக்க, அதற்கு நிகராக இல்லை என்றாலும், அதன் வழியில், ஒரு கலை பொக்கிஷமாக இந்தச் சிலையும் அமைந்திட வேண்டும் என்பது, அவரது கனவு! சிலையை எப்படி அவர் திட்டமிட்டார் என்றால், அதனுள்ளே ‘லிப்ட்’ வசதி வைக்கப்பட்டு, வள்ளுவனின் கையில் இருக்கும் ஓலைகளை ‘பால்கநி’யாக அமைத்து, அங்கிருந்து கடலைக் கண்டு களிக்கலாம் என்றும், அதற்கும் மேல் ‘லிப்ட்’ சென்று, வள்ளுவனின் கண்கள் வரை செல்லும்படி அமைத்து, வள்ளுவனின் கண்கள் வழியே சூரிய உதயத்தை காணும்படியும் வடிக்க வேண்டும் என்பது, அவரது கனவு! ஆனால், கருணாநிதியின் வாரிசு எதிர்பார்க்கும் கட்டிங் விவகாரங்கள் எல்லாம், அவருக்கு இடிபோல தலையில் இறங்கியது! தனது பாரம்பரியத்திற்கு இது ஒத்துவராது என்று உணர்ந்து, அவர் அந்தச் சிலையை வடிக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்!

*ஆகவே, திட்டம் கிடப்பில் போடப்பட்டு, ஏனைய துறைகளில் தம் ‘பொதுப்பணியை’, ‘மக்கள் பணியை’ திறம்பட நடத்தி வந்தார், கருணாநிதி! ஆனால், ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில், எதிலெல்லாம் நாம் ‘சிறப்பாகச்’ செயலாற்ற முடியும் என்று யோசித்து, மீண்டும் வள்ளுவர் சிலை திட்டம் தூசி தட்டப்படுகிறது!

*இப்பொழுதுதான், கதையின் முக்கிய கட்டம் & அதாவது, சிலையையும் வடிக்கவேண்டும்! கையூட்டும் பெறவேண்டும்! இதற்கு, சிற்பி மணிநாகப்பா ஒத்துவரமாட்டார். யாரைப் பிடிப்பது? தமிழகத்தில் காக்காய் கூட்டங்களுக்கா பஞ்சம்? உடனே பிடித்து வந்தார்கள், கணபதி ஸ்தபதியை! யார் இவர்?
இவர் ஒரு சிறந்த ஸ்தபதி. பல்லாயிரக்கணக்கான கோவில்களுக்கு கடவுள் சிலைகளை வடித்துக் கொடுத்தவர்! கடந்த 1991&96 ஆட்சிக் காலத்தில், செல்வி ஜெயலலிதா அவர்களின் அரசாங்கம், இவரை வைத்துதான், சிலைக்கான பூர்வாங்க ஆய்வுகளை நடத்தியது! அதற்காக 1 கோடியே 28 லட்சங்களை ஒதுக்கினார், அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா!

*இறைவன் சிலைகளை வடிப்பவர் ஸ்தபதி! மனிதன், விலங்குகளின் சிற்பங்களை வடிப்பவர், சிற்பி! இது, அடிப்படை சிற்ப சாஸ்திர அளவுகோல்! ஆனால், கணபதி ஸ்தபதியின் வேலைப்பாட்டில் குறுக்கிடும் விதமாக, கருணாநிதியே திட்டமும் தீட்டிக்கொடுத்தார்! முதல் கோணல், முற்றும் கோணல்! வள்ளுவனும் கோணலாக உருவானார்! வளைந்து நெளிந்து, ஒரு சிற்பம் உருவானது!

*கோவிலுக்குச் சென்று ராமன் சிலையோ, முருகன் சிலையோ வளைந்து இருந்தால், வணங்கிடும்வோம்! உயிர் வாழ்ந்ததாக சொல்லப்படும் மனிதர்களின் சிலை, கம்பீரமில்லாமல் வளைந்து இருந்தால், அதற்கு ஏதாவது ஒரு சிறப்புக் காரணம் இருக்க வேண்டும்தானே? அப்படி எந்தக் காரணமும் இதற்கு சொல்லப்படவில்லையே, பின்னர் எதற்கு இப்படி அமைந்தது? தமிழகத்திற்கு வருகை தரும் வெளியூர்காரர்கள் என்ன நினைப்பார்கள் இந்த அரைகுறை படைப்பை பார்த்து? ராஜராஜனின் கம்பீர படைப்புகளை பார்த்துவிட்டு, இந்தச் சிற்பத்தை பார்ப்பவர்கள் காறித்துப்ப மாட்டார்களா? இனி வரும் தலைமுறையினருக்கும் சேர்த்தல்லவா இந்த அவமானம்?

*நானே அறிவுறுத்தினேன். நானே உருவம் கொடுத்தேன், நானே மேற்பார்வை இட்டேன் என்று, பலமுறை சொல்வார் கருணாநிதி! ஆனால், இந்தச் சிலையைப் பொறுத்தவரை, மேலே செல்லும் துண்டு என்பது, கீழே வரவேண்டும் என்பது, இந்த மஞ்சள் துண்டு மகாதேவனுக்கு தெரியாதா? குமரியில் இருக்கும் வள்ளுவனின் சிற்பத்தில், மேலே செல்லும் துண்டு அங்கேயே தங்கி விடிகிறது! அதாவது, மாராப்பாக! வள்ளுவனுக்கே தாவணி போட்டுவிட்டக் கொடுமையை என்னவென்று சொல்வது?

*இதை மேற்பார்வை செய்வதற்கு ஒருத்தரை போட்டார்கள்! அவர் பெயர் முனைவர் மோகனராசு! இவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில், திருக்குறள் ஆராய்ச்சிக்குழுத் தலைவராக அப்பொழுது இருந்தார்! திருக்குறள் ஆராய்ச்சி என்றால், ‘ஆயோ ஆய்’ என்று ஆய்வுகள் நடத்திடுவார் என்று நீங்கள் நினைக்காதீர்கள்! இவரது சாதனையே, ஆண்டொன்றிற்கு 30 குழந்தைகளுக்கு 1330 குறள்களையும் மனப்பாடம் செய்ய வைத்து ஒப்புவிக்கச் செய்வது மட்டுமே! அதாவது, அந்தக் குழந்தைகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் திருக்குறளை சொல்லவைப்பது! ஒரு வரியைச் சொன்னால், அந்த வரியை முடிக்கும் விதமாக மனப்பாடம் (டப்பா அடிப்பது) செய்ய வைப்பது என்பது மட்டுமே! இதற்கு ஏழாம் கிளாஸ் தமிழ் ஆசிரியர் போதுமே, ஒரு ஆராய்ச்சி மையமும் அதற்கு ஒரு முனைவரும், பல லட்சம் ரூபாய் செலவும் எதற்கு?

*கருணாநிதியின் புறங்கை நக்குதல்களுக்கு ஒத்து ஊதத்தான்! இந்தத் தற்குறி மனிதர், திருவள்ளுவரைப் போலவே, ஜடாமுடியுடனும், தாடியுடனும் தோற்றமளிப்பவர்! கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்வதைப்போல, இவர் கருப்பு வள்ளுவன் என்று சொல்லிக் கொள்வாரோ என்னவோ? இவரை வைத்து மேற்பார்வை செய்யப்பட்டு முடிக்கப்பட்டதுதான், இந்தச் சிலை! இல்லை இல்லை, சிற்பம்! இல்லை இல்லை, புடைப்புச் சிற்பம்!

*இதற்கு ஒரு விழா வேறு எடுத்து, அந்த கணபதி ஸ்தபதி, கருணாநிதிக்கு ஒரு தங்க எழுதுகோலையும் பரிசளித்தார் என்பதுதான், உச்சக் கட்ட நகைச்சுவை! இதை சிலை என்று சொல்லி, அரசாங்கத்திலிருந்து பணம் பெறப்பட்டதை எதிர்த்து, பொதுநல வழக்குத் தொடரலாமா என்று, சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும்! கருணாநிதிக்கு கணபதி ஸ்தபதியால் வழங்கப்பட்ட தங்க எழுதுகோல், யார் பணத்தில் வாங்கப்பட்டது என்பதும், விசாரிக்கப்படவேண்டும்!

*மொத்தத்தில் குமரியில் இருக்கும் வள்ளுவனின் சிற்பம், வலக்கை நமக்கு காட்டும் மூன்று விரல் நமக்கு போடப்பட்ட பட்டை நாமத்தையும், இடக்கையில் இருக்கும் ஓலைகள், சர்க்காரியா அறிக்கையையும் குறிக்கும் என்று சொல்லி, ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்!

*15.04.1979 அன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது மேற்பார்வையில், அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட வள்ளுவர் சிலை, வானுயர்ந்த சர்ச்சையாக காட்சியளிக்கிறது!