திரௌபதி இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அறிவிக்கப்பட்டார்.

Filed under: சினிமா |

திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் .


தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


இந்தப் படத்திலும் ‘திரௌபதி’ பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி நடிக்கவுள்ளார் .இந்தப் படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இவர் ‘முள்ளும் மலரும்’, ‘செந்தூரப்பூவே’, ‘மின்னலே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்.