“தி கிரேட் இந்தியன் கிச்சன்”

Filed under: சினிமா |

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “யூஏ” சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.