தொடர் விடுமுறையால் குஷியான பள்ளி மாணவர்கள்!

Filed under: தமிழகம் |

மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வு முடிந்து அக்டோபர் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உளள்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி அக்டோபர் 10 முதல் 12வரை நடைபெற உள்ளதால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.