தொழிலதிபர் காருக்கு தீ!

Filed under: தமிழகம் |

தொழிலதிபர் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்ற தொழிலதிபர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தொழிலதிபர் வீட்டிற்கு அருகில் உள்ள அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் பட்டாசு வீசி விட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது வழக்குப்பதிவு செய்து தொழிலதிபர் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.