நடிகர் அருண்விஜய் படத்தின் போஸ்டர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் அருண் விஜய் பல வருடங்களாக போராடி “தடையற தாக்க” மற்றும் “தடம்” போன்ற திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகவுள்ளார். அவர் இப்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு புது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அருண் விஜய், அருகில் ஒரு சிறுமியோடு நிற்கும் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.