நடிகர் கார்த்திக்கின் நன்றி பதிவு!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டாருக்கும், உலகநாயகனுக்கும் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, ரு.300 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்தவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள, நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ரஜினி சார் உங்களிடமிருந்து அழைப்பு வந்தது அற்புதமானது. மற்றவர்கள் செய்யும் பணிக்கு நீங்கள் தரும் பாராட்டும் மரியாதையும் அன்பு நிறைந்ததாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு டுவீட்டரில், “சினிமாவில் உயர்ந்த தரத்தை அடைய எப்போதும் எங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறீகள்’’ எனத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இதற்கு லைக்குகள் கொடுத்து வருகின்றனர்.