நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம், இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஜெய் பீம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.