நடிகர் விஜய் தந்தை மோதல் வெளிவரும் அடுத்தடுத்த ரகசியங்கள்…

Filed under: சினிமா,தமிழகம் |

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியான நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகே, விஜயின் தந்தை எஸ்.ஏ.சி-யின் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த அறிவிப்பிற்கு, நடிகர் விஜயும், அறிக்கை வெளியிட்டு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று விஜயின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அரசியல் பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும், எஸ்.ஏ.சி கேட்காததால், அவரிடம் விஜய் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.
அசோசியேஷன் தொடங்குவதாகவே, என்னிடம் எஸ்.ஏ.சி. கையெழுத்து பெற்றார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், கட்சி தொடங்குவதற்காக, இரண்டாவது முறை கையெழுத்து கேட்டபோது, தான் போடவில்லை என்று கூறிய அவர், கட்சியில் இருந்து தான் விலவி விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.அரசியல் கட்சி தொடங்க இருப்பது குறித்து எதிர்காலத்தில் விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஷோபா சந்திரசேகர் தெரிவித்தார்.

விஜய்யின் குடும்பத்திற்குள் நடக்கும் விவகாரங்கள் தொடர்ந்து பொது வெளியில் வெளியாகி அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்றிவிட்ட ஏணியை விஜய் எட்டி உதைக்கிறார் என ஒரு தரப்பும், விஜய்க்கு SAC குடைசலை கொடுக்கிறார் என மற்றொரு தரப்பும் விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்