நடைபயணத்திற்கு தயாராகும் அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதை பற்றிய தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் நிலையில் கட்சி பல சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பலர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநிலம் தழுவிய நடைபயணத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக பேசிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏப்ரம் 14ம் தேதி அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாகவும் செல்வதாக கூறப்படுகிறது.