நண்பர்களுக்குள் கத்தி குத்து!

Filed under: தமிழகம் |

நண்பர்கள் இணைந்து பப்ஜி விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவம் நடந்தேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார் அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.