நாங்களும் குளிப்போம்…!

Filed under: தமிழகம் |

குற்றாலத்தில் தண்ணீர் நீரின் அளவு அதிகமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாம்புகளின் படையெடுப்பு அதிகமாக இருப்பதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மிக முக்கியாக தமிழகத்தின் சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன்களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் பீதியடைந்துள்ளனர். அதனால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.