நாங்களும் சர்வே எடுத்திருக்கிறோம் திமுகவிற்கு ஷாக் கொடுத்த கார்த்தி சிதம்பரம்

Filed under: அரசியல்,தமிழகம் |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வருகை புரிந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணிக்கையை மனதில் வைத்து கொண்டு கூட்டணி பேச மாட்டோம் என்றும் திமுக எப்படி ஐபேக் முலம் சர்வே எடுத்து வைத்து இருக்கிறார்களா, அதேமாதிரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் 234 தொகுதியிலும் சர்வே எடுத்து வைத்து உள்ளதாகவும், அந்த சர்வே மூலம், காங்கிரஸ் கட்சிக்கு எங்கு பலம் இருக்கின்றது, காங்கிரசால் கூட்டணி கட்சிக்கு எங்கு பலம் இருக்கின்றது என்பதை பொறுத்தே சீட் கேட்போம் எனவும் தெரிவித்தார்.

மேலும் திமுக கூட்டணி கட்சிகளை முறையாக அழைக்க வேண்டும் எனவும், நம்பரை மனதில் வைத்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு போக முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் காங்கிரசால் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் இடங்களின் அடிப்படையிலுமே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிவித்தார்.