நாயின் விலை ரூ.20 கோடியா?

Filed under: இந்தியா |

காகேசியின் ஷெப்பர்டு என்ற இன நாய் ஒன்றை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூபாய் 20 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணக்காரர்கள் பெரும்பாலும் தங்களுக்கு பிடித்த செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமும், பிரியமும் வைத்திருப்பார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கில் மற்றும் லட்சக்கணக்கில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு நாய் வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 கோடிக்கு காகேசியின் ஷெப்பர்டு இன நாயை அவர் வாங்கி உள்ளார். ஒன்றரை வயதுடைய அந்த நாயை அவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் இந்த வகை நாயை பார்த்ததிலிருந்து அந்த நாயை வாங்க வேண்டும் என்று தனக்கு விருப்பம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்த நாயை ஏசி அறையில் வைத்து வளர்க்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.