நாளை திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

நாளை முதல் தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 11-ம் தேதி அன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே அனைத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.