நாளை மறுநாள் முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பயணம் செய்யலாம்!

Filed under: அரசியல் |

நாளை மறுநாள் முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பயணம் செய்யலாம்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்பதிவுக் கொண்ட ரயில் பெட்டிகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மார்ச் 17 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளிலும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 06867 / 06868 விழுப்புரம் – மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில்; 10 செகண்ட் க்ளாஸ் பெட்டிகளுடன் முன்பதிவில்லா டிக்கெட்கள் மூலம் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 06087 / 06088அரக்கோணம் – சேலம் – அரக்கோணம் MEMU ரயில்; இரண்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் கம் செகண்ட் க்ளாஸ் சிட்டிங் பெட்டிகள் மற்றும் 6 செகண்ட் க்ளாஸ் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 06115 / 06116 சென்னை எழும்பூர் – புதுச்சேரி – சென்னை எழுப்பூர் சிறப்பு ரயில்; இரண்டு செகண்ட் க்ளாஸ் சேர் கார் பெட்டிகள், 7 ஜெனரல் செகண்ட் க்ளாஸ் பெட்டிகள் என முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

ரயில் எண் 06327 – 06328 புனலூர் – குருவாயூர் சிறப்பு ரயில்

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இல்லாத டிக்கெட்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *