நிவின் பாலி படத்தின் டைட்டில் எப்போது அறிவிப்பு?

Filed under: சினிமா |

இயக்குனர் ராம் மற்றும் நிவின் பாலி இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இவர்களது திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதி மற்றும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் வரும் அக்டோபர் 11ம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின் பாலி ஆகிய இருவரின் பிறந்தநாளின் போது படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் ஆகியவற்றை ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்துக்கு ‘ஏழு மலை ஏழு கடல் தாண்டி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.