நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க!

Filed under: Uncategory |

நீங்க கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா. அப்போ இத கொஞ்சம் படிச்சி பாருங்க!

தினமும் கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான கழிவறைக்குச் செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு கழிவறைக்கு சென்ற செல்போன் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் கட்டிகள் மற்றும் மூலம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இது மருத்துவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் பலரும் தாங்கள் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவார்கள்.

அதில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்தினால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கும்.பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூல நோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. மூலம் என்பது ஒருநாளில் நீண்டநேரம் அமர்வதால் மட்டும் வராது. தினம்தினம் அப்படி அமர்ந்திருந்தால் கட்டாயம் மூலநோய் உண்டாகும். இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் செல்போன் பயன்படுத்துவதால் மட்டுமல்ல.

இதற்கு முன்னதாக தங்களுக்கு பிடித்த புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து உண்டு படிக்கும் பழக்கமும் இருந்தது. அவ்வாறு மூலம் வருவதற்கு முன்பு அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவை இருக்கும். எனவே இந்த அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால் மூலம் வராமல் தவிர்க்க நார்ச்சத்து, தினமும் உடற்பயிற்சி, கழிவறைக்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை செய்ய வேண்டும். இப்படி செய்யாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பை நீங்கள் சந்திக்க நேரிடும்.