நெட்பிளிக்ஸ் குறித்து இங்கிலாந்து அரசு எச்சரிக்கை!

Filed under: உலகம்,சினிமா |

இங்கிலாந்து அரசு நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.


உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.