பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றுவதில் புதிய சிக்கல்…

Filed under: Uncategory,அரசியல்,இந்தியா |

பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டமன்ற மேலவையில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவசரச் சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு தீர்மானித்துள்ளதாக தலவல்கள் வந்துள்ளது.

இந்த மசோதாவானது கடந்த புதன்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவையில், எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து அந்த சட்டத்தை தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் மசோதாவை மேலவையில் நேற்று தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் தலைவரான பிரதாப்சந்திர ஷெட்டி, அவையை வியாழன் மாலையே ஒத்தி வைத்து அறிவித்தார்.

இதற்கு எதிராக மேலவையின் பாஜக உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.