பாகிஸ்தான் டிரோன் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவியதையடுத்து அந்த டிரோன் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவுவதும் அவர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடி நடவடிக்கை எடுத்து வருவதுமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானின் டிரோன் ஒன்று திடீரென ஊடுருவியதாகவும் இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானின் டிரோனை சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அந்த டிரோன் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் டிரோன் ஊடுருவிய பகுதியைச் சுற்றி பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.